Vidiyal Society is an organization that is tirelessly striving to advance the path of women. We have a track record of creating more than 50 entrepreneurs through our company. We are implementing vocational training in all villages to create more women entrepreneurs. As a part of this, Yogammal, a resident of Kongarpalayam, has benefited from the Vidiyal Society. He further said that "I was working as a wage earner and my income was not enough to support the family. Vidiyal Society not only guided us but also provided us with necessary help, so I have become a dealer of covering jewelry sets. 500 to 700 per day through this, he expressed his gratitude to Vidiyal Society and Director Mrs. M. Maheswari for providing this opportunity". Also, by the Vidiyal Society, sewing training was provided and the necessary equipment was provided. விடியல் சொசைட்டி பெண்கள் முன்னேற்ற பாதையில் செல்ல அயராது பாடுபட்டு கொண்டிருக்கும் நிறுவனம். எங்கள் நிறுவனத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இன்னும் பல பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க தொழில் பயிற்சிகளை அணைத்து கிராமங்களில் செயல்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக கொங்கர்பாளையத்தில் குடியிருக்கும் யோகம்மாள் அவர்கள் விடியல் சொசைட்டி மூலம் பயனடைந்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது "நான் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தேன் வருமானம் குறைந்த அளவில் மட்டுமே கிடைத்தது குடும்பத்தை வழிநடத்த போதுமானதாக இல்லாமல் இருந்தது. விடியல் சொசைட்டி நிறூவனம் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது மட்டுமில்லாமல் வேண்டிய உதவிகளை செய்து கொடுத்ததால் கவரிங் நகை செட் வியாபாரியாக மாறி உள்ளேன். இதன் மூலம் நாளொன்றிற்கு 500 முதல் 700 வரை கிடைக்கிறது இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த விடியல் சொசைட்டிக்கும் இயக்குனர் திருமதி M.மகேஸ்வரி அவர்களுக்கும் நன்றி" என தெரிவித்தார்.மேலும் விடியல் சொசைட்டி மூலம் தையல் பயிற்சி கொடுத்து அதற்கான சான்றிதழ் மற்றும் தேவையான உபகரணங்கள் பெற்றுத்தரப்பட்டது.
None