26-02-2024 : There are more than a hundred families in Maranoor village under Oothandiyur panchayat of Sathyamangalam district of Erode district. Due to lack of bus facility in the village for the past 10 years, they walk three kilometers every day to meet their own needs and go to schools. School children are more likely to drop out of school as they walk up to three kilometers every day. People in this village are children and old people who cannot go immediately for urgent needs like medical treatment. Therefore, 30 people participated in the people's grievance redressal camp at Erode district collector's office today to provide bus facility on behalf of community leaders and women of Varanam village in Maranoor village through Sathyamangalam Vidyal Society. And the director of Vidiyal Society Mrs. It is noteworthy that Maheshwari was with them and the field workers. 26-02-2024 : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் ஊத்தண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாரனூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது கிராமத்தில் கடந்த 10 வருடங்களாக பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் தினமும் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் பேருந்து ஏறி தன் சொந்த தேவைகளை பூர்த்தி செய்யவும், பள்ளிகளுக்கும் சென்று வருகிறார்கள். தினமும் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்வதால் பள்ளி குழந்தைகள் அதிகமாக பள்ளி இடைநிற்றல் ஆகிறார்கள். மருத்துவம் பார்ப்பது போன்ற அவசர தேவைகளுக்கு இவர்களால் உடனே செல்ல முடியாத சூழ்நிலையில் இக்கிராமத்தில் உள்ள மக்கள் குழந்தைகள் வயதானவர்கள் இருக்கிறார்கள். எனவே சத்தியமங்கலம் விடியல் சொசைட்டி மூலம் மாரனூர் கிராமத்தில் உள்ள சமூக தலைவர்கள் மற்றும் வளரினம் பெண்கள் சார்பாக பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 30 பேர் கலந்து கொண்டு இது தொடர்பாக மனு கொடுத்தார்கள். மேலும் இவர்களை வழிகாட்டும் பணியில் விடியல் சொசைட்டியின் இயக்குனர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
None