An awareness meeting on participation in Gram Sabha meetings and voter rights was conducted in Kambanoor, Gobichettipalayam Taluk, Erode District. A total of 25 community leaders and CCFF members participated in the meeting, representing villages such as Kambanoor, K.N. Palayam, Kamatchi Nagar, Vaniputhur, Vilangombai, Kaliyur, Sengadu, Kongarpalayam, and Modur. Community Trainer Ms. Maheswari explained the importance of applying for and obtaining a voter ID card and informed that March 27 is the final deadline to enroll in the voter list. She emphasized that fulfilling one’s democratic duty by voting is the responsibility of every individual. In connection with World Water Day observed on March 22, training was provided to community leaders on participating effectively in Gram Sabha meetings. Issues faced in their respective villages were also discussed, and it was decided to prepare petitions and submit them during the Gram Sabha meetings. The meeting concluded with a vote of thanks.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, கம்பனூரில் சமூக தலைவர்களுக்கு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் வாக்காளர் உரிமை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 25 சமூக தலைவர்கள் மற்றும் CCFF உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கம்பனூர், கே.என். பாளையம், காமாட்சி நகர், வாணிபுத்தூர், விளாங்கோம்பை, காளியூர், செங்காடு, கொங்கர்பாளையம், மோதூர் ஆகிய கிராமங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். கம்யூனிட்டி ட்ரெயினர் மகேஸ்வரி அவர்கள் வாக்காளர் அட்டை விண்ணப்பித்து பெறுவது அவசியம் குறித்து விளக்கி, வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான இறுதி வாய்ப்பு மார்ச் 27ஆம் தேதி வரை உள்ளதாக தெரிவித்தார். மேலும், நாம் அனைவரும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வாக்களிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். உலக தண்ணீர் தினம் மார்ச் 22ஆம் தேதி முன்னிட்டு, கிராம சபை கூட்டங்களில் சமூக தலைவர்கள் பங்கேற்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தங்களுடைய கிராமங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, மனுக்கள் தயாரித்து கிராம சபை கூட்டங்களில் சமர்ப்பிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இறுதியாக, நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

