An entrepreneurship guidance training program was conducted today at Vadakku Pettai, Sathyamangalam.
During the session, M. Maheswari, Director of Vidiyal Society, explained in detail about loan assistance available for entrepreneurs, financial schemes provided by the government and banks, procedures to access these schemes, and proper methods of loan repayment. She also emphasized the importance of savings and initiated savings among the participants.
The entrepreneurs who attended the camp clarified their doubts and gained better understanding. This guidance session was beneficial for both aspiring entrepreneurs and those already running businesses.
A total of 6 participants attended the program.
இன்று சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விடியல் சொசைட்டி இயக்குநர் M. Maheswari அவர்கள் தொழில் முனைவோருக்கான கடன் உதவிகள், அரசு மற்றும் வங்கிகள் வழங்கும் நிதி திட்டங்கள், அவற்றைப் பெறும் நடைமுறைகள் மற்றும் கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கமாக பேசினார். மேலும், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, கலந்து கொண்டவர்களிடம் சேமிப்பு தொடங்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்ட தொழில் முனைவோர் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றனர். இந்த வழிகாட்டுதல் முகாம் புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கும், ஏற்கனவே தொழில் செய்து வருவோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 6 நபர்கள் கலந்து கொண்டனர்.
