On the occasion of the 77th Republic Day, Gram Sabha meetings were conducted in Kongarpalayam, Akkaraikodiveri, Kumarapalayam, and Uthandiyur Panchayats located in Sathyamangalam and Gobi Taluks of Erode District.
Community leaders from Vidiyal Society actively participated in these meetings and raised key issues concerning the needs of the village communities by submitting various petitions to the concerned authorities.
The petitions included applications for 15 beneficiaries under the Kalaignar Kanavu Illam Housing Scheme, requests to address drinking water issues, improvement of road facilities in Kumarangardu village, and the provision of streetlight facilities.
77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கோபி தாலுகாக்களில் அமைந்துள்ள கொங்கார்பாளையம், அக்கறைக்கொடிவேரி, குமாரபாளையம் மற்றும் உத்தண்டியூர் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
இக்கூட்டங்களில் விடியல் சொசைட்டியின் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு கிராம மக்களின் முக்கிய தேவைகள் குறித்து விவாதித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பல்வேறு மனுக்களை சமர்ப்பித்தனர்.
இதில் கலைஞர் கனவு இல்லம் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 15 பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள், குடிநீர் பிரச்சினை, குமாரங்கரடு கிராம சாலை வசதி மேம்பாடு மற்றும் தெருவிளக்கு வசதி தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
