On behalf of Vidiyal Society, a health awareness program was conducted at Vellimalaikaradu village, Sathyamangalam Taluk, Erode District. The session focused on educating women and adolescent girls about proper hygiene practices during menstruation. The village community leader, Ms. Kasthuri, explained the hygienic methods to be followed during this period. Sanitary napkins were distributed to the participants by Vidiyal Society. Additionally, training was provided on how to access basic rights and government welfare schemes. Field workers Gopinath and Christopher facilitated the session and conducted the training. More than 20 participants attended and actively took part in the event.
விடியல் சொசைட்டி சார்பாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா வெள்ளிமலைகரடு கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குறிப்பாக, பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து கிராம சமூகத் தலைவர் கஸ்தூரி அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு விடியல் சொசைட்டி சார்பாக நாப்கின்கள் வழங்கப்பட்டன. மேலும், அரசு சார்ந்த அடிப்படை உரிமைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் களப்பணியாளர்கள் கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபர் அவர்கள் வழிகாட்டியாக கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


