On behalf of Vidiyal Society, community leaders participated in the Grama Sabha meetings and submitted petitions to address their villages’ basic needs and issues. In Kodiveri, petitions were submitted for road facilities and streetlights. In Kongarpalayam, the community leader and CCFF members from Kampanur requested the construction of a canal retaining wall and road facilities. Vinobanagar residents urged the implementation of the “Kalaignar Kanavu Illam” housing scheme in their area. In Makkinakombai, residents from Vellimalaikaradu requested the renovation of cluster houses. In Uthandiyur, Maranoor villagers demanded bus facilities, while Poiyagoundanur villagers requested housing land pattas. Additionally, as per the state trainer’s guidance, petitions regarding PHC and UPHC infrastructure gaps were also submitted by community leaders and partners, urging immediate action and resolution. விடியல் சொசைட்டி சார்பாக சமூக தலைவர்கள் தங்கள் கிராமங்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று மனுக்கள் வழங்கினர். கொடிவேரி கிராம சபையில் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கொங்கர்பாளையம் கிராம சபையில் கம்பனுர் கிராமத்தின் சமூகத் தலைவர் மற்றும் CCFF உறுப்பினர்கள் கால்வாய் தடுப்பு சுவர் மற்றும் சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை வைத்தனர். வினோபாநகர் கிராம மக்கள் “கலைஞர் கனவு இல்லம்” திட்டம் தங்கள் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரினர். மாக்கினகோம்பை கிராம சபையில் வெள்ளிமலைக்கரடு கிராம மக்கள் தொகுப்பு வீடுகளை மறுசீரமைக்க வேண்டுமென மனு அளித்தனர். உத்தண்டியூர் கிராம சபையில் மாரனூர் கிராம மக்கள் பேருந்து வசதி கோரியும், போயகவுண்டனூர் கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கவும் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், மாநில பயிற்சியாளர் வழிகாட்டுதலின்படி PHC மற்றும் UPHC குறைபாடுகள் தொடர்பான மனுக்களும் சமூகத் தலைவர்கள் மற்றும் சமூக கூட்டாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு, அவற்றை தீர்மானமாக நிறைவேற்ற கோரப்பட்டது.
Vidiyal Tailoring Center