An ESP monthly meeting was organized in Ambedkar Nagar, Sathyamangalam Taluk, Erode District. The purpose of this meeting was to encourage participation in the upcoming Gram Sabha meeting and to raise awareness about the “Anbukaarangal Scheme.” For this session, 15 community leaders from different villages came and participated.
CB Maheswari provided training to the leaders on how to present and address their village’s basic issues in the Gram Sabha. Each community leader also discussed the problems faced in their own villages. In addition, awareness was given about the “Anbukaarangal Scheme,” introduced by the Government of Tamil Nadu.
With the upcoming “Ungaludan Stalin Camp,” villagers who have not yet received the “Kalaignar Magalir Urimai Thogai” benefit or who do not have a free housing patta were advised to use this camp to access the welfare schemes. The meeting was coordinated by Amsaveni, a Vidiyal community leader from Ambedkar Nagar trained under ESP. All community leaders actively participated and received training in the session.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா, அம்பேத்கர் நகரில் ESP மாதாந்திர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் நோக்கம் வரவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிப்பதும், “அன்புக்கரங்கள் திட்டம்” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும். இக்கூட்டத்தில் மொத்தம் 15 சமூக தலைவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பங்கேற்றனர்.
CB மகேஸ்வரி அவர்கள் கிராம சபையில் தங்கள் கிராமத்தின் அடிப்படை பிரச்சினைகளை எவ்வாறு முன்வைத்து தீர்வு காண்பது என்பதில் பயிற்சிகள் அளித்தார். மேலும் ஒவ்வொரு சமூக தலைவரும் தங்கள் கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளை விவாதித்தனர். தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள “அன்புக்கரங்கள் திட்டம்” பற்றியும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
வரவிருக்கும் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” நடைபெறுவதையொட்டி, “கலைஞர் மகளிர் உரிமை தொகை” பெறாதவர்கள், இலவச வீட்டுமனை பட்டா இல்லாதவர்கள் நலத்திட்டங்களை பெறுவதற்கு இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த, ESP பயிற்சி பெற்ற விடியல் சமூகத் தலைவர் அம்சவேணி அவர்கள் ஒருங்கிணைத்தார். அனைத்து சமூக தலைவர்களும் உறுதியாக பங்கேற்று பயிற்சிகளை பெற்றனர்.
