A special training program on climate change and preventive measures was conducted for women and college students at the Vidiyal Society office. The session explained in detail the causes of climate change and its social and environmental impacts. The effects on agriculture, drinking water, health, and livelihoods were highlighted. Preventive actions such as reducing plastic usage, tree planting, and rainwater harvesting were strongly emphasized. Participants were also guided on protecting natural resources, promoting renewable energy, and spreading awareness within their communities. Women and students actively shared their experiences and clarified their doubts during the session. All participants expressed their commitment to carry this knowledge to their families and villages. More than 40 women and students attended and benefitted from the program. Overall, the training served as a meaningful step towards collective action against climate change in the community.
விடியல் சொசைட்டி அலுவலகத்தில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்காக காலநிலை மாற்றம் மற்றும் தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியின் மூலம் காலநிலை மாற்றத்தின் காரணங்கள், அதன் சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. விவசாயம், குடிநீர், ஆரோக்கியம், மற்றும் வாழ்வாதாரம் மீது ஏற்படும் பாதிப்புகள் எடுத்துக்கூறப்பட்டன. அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, மரங்கள் நடுவது, மழைநீர் சேகரிப்பு செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, புதுப்பிக்கத்தக்க சக்திகளைப் பயன்படுத்துவது, மற்றும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து வழிகாட்டப்பட்டது. பங்கேற்ற பெண்கள் மற்றும் மாணவிகள் தங்களின் அனுபவங்களையும் கேள்விகளையும் பகிர்ந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தில் காலநிலை தடுப்பு தொடர்பான அறிவை பரப்புவதாக உறுதியளித்தனர். மொத்தத்தில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சி, சமூகத்தில் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கான நல்ல தொடக்கமாக அமைந்தது.
