Vidiyal Society is a voluntary non-profit organization operating in Sathyamangalam, Erode District. This organization plays a vital role in supporting the education of tribal children living in the hill regions. To fulfill this mission, evening classes are being conducted with the help of local donors. Currently, more than 30 children are attending these sessions. These students are forced to travel through remote and forested areas daily, facing the challenges of poor transportation and threats from wild animals. In addition, some of the students fall prey to substance abuse and drop out of school. To reduce this issue, the organization is actively working with government guidance to implement all necessary facilities and support. விடியல் சொசைட்டி, சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் ஒரு தன்னார்வல தொண்டு அமைப்பாகும். இம்மையம் மலைவாழ் பழங்குடியின மாணவர்களின் கல்வியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நோக்கத்துடன், மாலை நேர வகுப்புகள் உள்ளூர் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு தற்போது 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் நிலையில் உள்ளனர். இம்மாணவர்கள் தினசரி புல்வெளி மற்றும் வனப்பகுதிகள் வழியாக பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். போக்குவரத்து வசதியின்மை, வன விலங்குகளின் அச்சுறுத்தல் போன்ற சவால்களையும் எதிர்கொள்கின்றனர். அத்துடன், சில மாணவர்கள் போதைக்கு அடிமையாகி பள்ளியில் இடைநிற்றல் செய்யும் பிரச்சனையும் உள்ளது. இதை தடுக்கும் நோக்கில், அரசு வழிகாட்டுதலுடன் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Vidiyal Tailoring Center