On behalf of Vidiyal Society Sathyamangalam, an awareness and training session was conducted in Vellimalaikaradu village, Sathyamangalam Taluk, Erode District, to prepare the people for the upcoming “Ungaludan Stalin” camp. ESP-trained Vidiyal community leader Kasturi, along with Christopher and Gopinath, facilitated the session. The training focused on individual rights such as applying for house patta, housing schemes, and government insurance cards. Participants were guided on how to correctly fill out and submit related applications. The session saw enthusiastic participation from the villagers. Special awareness was given to adolescent girls on personal health, hygiene, and well-being. Sanitary napkins were distributed to them as part of the session. The camp was well received by the local community. It aimed to empower people to claim their entitlements and access government benefits. Further such trainings are planned to continue. விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் சார்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா வெள்ளிமலைக்கரடு கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமிற்கு மக்கள் தயாராக வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் ESP பயிற்சி பெற்ற விடியல் சமூக தலைவர் கஸ்தூரி அவர்களுடன் இணைந்து கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள். கூட்டத்தில் வீடு, வீட்டுமனை பட்டா, மற்றும் அரசு காப்பீட்டு அட்டை உள்ளிட்ட தனிப்பட்ட உரிமைகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டது. மக்களுக்கு குறியீட்டு விண்ணப்பங்களை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. பயிற்சியில் மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். வளர் இளம் பெண்களுக்கு உடல் நலம், சுத்தம், பாதுகாப்பு ஆகிய விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு நாப்கின்கள் வழங்கப்பட்டன. கிராம மக்கள் இம்முகாமுக்கு நல்ல வரவேற்பு அளித்தனர். மக்களின் உரிமைகளை அறிந்து பயன்பெற வழிகாட்டும் வகையில் இம்முகாம் அமைக்கப்பட்டது. இது போன்ற பயிற்சிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Vidiyal Tailoring Center