An awareness session was organized in Poyagoundanur village, which falls under the Shenpagapudur Panchayat of Sathyamangalam Taluk, Erode District, ahead of the upcoming Jamabandhi meeting scheduled for the 28th of this month. The session was led by CF Mr. Christopher, with the support of Vidiyal’s ESP-trained community leaders Mrs. Kowsalya and Mr. Murugan.
During the session, villagers were sensitized about the importance of participating in the Jamabandhi process to resolve long-standing community issues. They were also informed about their rights and the significance of active civic engagement.
Members of the CL and CCFF groups received training on identifying community problems, drafting petitions, and effectively following up with government officials. A focused discussion was held on how to properly draft and submit petitions.
As many families in the village live in a single household, guidance was provided using a related Government Order (GO) shared by SLT Mr. Ambrose to support their case. Based on this, application forms were filled out for about 25 to 30 individuals.
Participants were also instructed to attach all necessary supporting documents to ensure successful submission during the Jamabandhi meeting. A total of 3 CL and 18 CCFF members took part in the session.
This initiative aimed to build awareness and confidence among the community to claim their entitlements effectively and seek timely resolutions through proper administrative channels.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவின் செண்பகபுதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட போயகவுண்டனூர் கிராமத்தில், இந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜமாபந்தி கூட்டத்தையொட்டி, ஒரு விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வை CF திரு. கிறிஸ்டோபர் அவர்கள், ESP பயிற்சி பெற்ற விடியல் சமூக தலைவர்கள் திருமதி கவுசல்யா மற்றும் திரு. முருகன் ஆகியோர் ஆதரவுடன் நடத்தினார்.
அமர்வின்போது, கிராம மக்களுக்கு நீண்ட நாட்களாக நிலவி வரும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜமாபந்தி செயல்முறையில் பங்கேற்பதன் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
CL மற்றும் CCFF குழுக்களின் உறுப்பினர்களுக்கு சமூக பிரச்சனைகளை அடையாளம் காணுதல், மனுக்களை தயார் செய்தல் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து பின்தொடருதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மனுக்களை சரியான முறையில் தயாரித்து சமர்ப்பிப்பது குறித்தும் விவாதம் நடைபெற்றது.
இந்த கிராமத்தில் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசிப்பதைக் கருத்தில் கொண்டு, SLT திரு. அம்ப்ரோஸ் வழங்கிய சம்பந்தப்பட்ட அரசு உத்தரவை (GO) பயன்படுத்தி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 25 முதல் 30 நபர்களுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டன.
மேலும், ஜமாபந்தி கூட்டத்தின் போது மனுக்கள் வெற்றிகரமாக சமர்ப்பிக்க அனைத்து தேவையான ஆதார ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 3 CL மற்றும் 18 CCFF உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த முயற்சி, மக்கள் தங்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
