A climate change awareness camp was organized in Sathyamangalam, Erode District, focusing on educating workers about environmental challenges. The event witnessed participation from over 50 workers from nearby areas. The program was led by Pasupathi under the guidance of Vidiyal Society. The main objective of the camp was to help workers understand the real impact of climate change and introduce practical solutions. Topics like rising temperatures, water scarcity, and deforestation were explained in a simple and engaging manner. Participants were trained in eco-friendly practices such as tree plantation, natural farming, and rainwater harvesting. Mrs. M. Maheswari, Director of Vidiyal Society, graced the event and delivered a special address. In her speech, she emphasized the need for individual responsibility in tackling climate change and called for lifestyle changes to protect the environment. The camp was a great success and motivated workers to take climate action in their communities. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வூட்டும் முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு முகாம் விடியல் சொசைட்டியின் வழிகாட்டுதலுடன் பசுபதி தலைமையில் நடத்தப்பட்டது. முகாமின் முக்கிய நோக்கம், பணியாளர்கள் நேரடியாக எதிர்கொள்ளும் சூழலியல் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை புரியவைத்தல் ஆகும். பசுபதி மற்றும் அவரது குழுவினரால் வெப்பநிலை உயர்வு, நீர் பற்றாக்குறை மற்றும் மரங்கள் நடுதல் போன்ற பிரச்சனைகள் பற்றி விளக்கப்பட்டன. மேலும், மரக்கன்று நடுதல், இயற்கை விவசாயம், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட செயல்முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு விடியல் சொசைட்டி இயக்குனர் திருமதி மகேஸ்வரி அவர்கள் வருகை தந்து சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வியல் பழக்கங்களை மாற்றி பசுமை சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். முகாம் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
Vidiyal Tailoring Center