Thanks News Paper Date: 16-04-2025 | Location: Sathyamangalam, Erode District Sathyamangalam: Vidiyal Society, a grassroots non-profit organization operating in the remote tribal regions of Sathyamangalam in Erode District, organized an impactful awareness session for adolescent girls on April 16, 2025. This initiative was part of the organization’s ongoing mission to empower young women through education, awareness, and community engagement. The session was honored by the presence of Mr. Gnanaprakash, a law student from Erode Law College, who served as the special guest. Addressing the gathering, he shed light on women’s legal rights, personal safety, and the legal support systems available, encouraging the girls to stay informed and assert their rights confidently in society. More than 30 adolescent girls participated in the interactive session, raising questions and receiving insightful answers. The event was presided over by Mrs. M. Maheswari, Director of Vidiyal Society, whose leadership has been instrumental in championing gender empowerment in the region. The session also saw the presence of Mrs. Soundarya, a community leader from Kodiveri, and was coordinated by Mr. M. Gopinath. Field workers Mr. Christopher and Mr. Pasupathi provided on-ground support for organizing the event. Such grassroots initiatives are crucial in instilling confidence and awareness among young girls, enabling them to grow into informed and courageous individuals ready to face the world. தேதி: 16-04-2025 | இடம்: சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு அமைப்பான விடியல் சொசைட்டி, 16 ஏப்ரல் 2025 அன்று வளரிளம் பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி, இளம்பெண்களின் சுயநலன், பாதுகாப்பு மற்றும் உரிமை உணர்வை வளர்த்தெடுக்க செய்யும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இக்கூட்டத்தில் ஈரோடு சட்டக் கல்லூரி மாணவரான திரு. ஞானபிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பெண்கள் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சட்ட உதவிகள் குறித்து பயனுள்ள தகவல்களை பகிர்ந்தார். இளம்பெண்கள் தங்களது உரிமைகளை அறிந்து, துணிவாக எதிர்கொள்ள வேண்டும் என்ற ஊக்கத்தை அவர் வழங்கினார். 30க்கும் மேற்பட்ட வளரிளம் மாணவிகள் இதில் பங்கேற்று, கலந்துரையாடல்களில் ஈடுபட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். கூட்டத்திற்கு விடியல் இயக்குனர் திருமதி மகேஸ்வரி தலைமை தாங்கினார். கொடிவேரியை சேர்ந்த சமூக தலைவி திருமதி சௌந்தரியா பங்கேற்றார். கூட்ட ஒருங்கிணைப்பை திரு. கோபிநாத் மேற்கொண்டார். விடியல் களப்பணியாளர்கள் திரு. கிறிஸ்டோபர் மற்றும் திரு. பசுபதி செயல்பாடுகளை ஆதரித்தனர். இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வளர்ந்துவரும் இளம்பெண்கள் தங்களை நம்பிக்கையுடன் சமூகத்தில் எதிர்கொள்ள வழிவகுக்கும்.
Vidiyal Tailoring Center