25-12-2024 - More than 1,000 people reside in the Vilangombai region, which is a highly mountainous area. Many of them have struggled without land, while others, despite having land, lacked proper housing. Through Vidiyal Society, initiatives such as Gram Sabha awareness camps and meetings with government officials were organized to prepare and guide the people accordingly. Vidiyal Society's community leader, Aasirvadham, along with field workers, played a key role in successfully executing these efforts. As a result, more than 150 houses have been constructed and provided by the government.
25-12-2024 - விளாங்கோம்பை பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இது மிகுந்த மலைப்பாங்கான பகுதி. இப்பகுதியில் பலர் நிலமின்றி தவித்து வந்தனர், மேலும் சிலர் நிலம் இருந்தும் வீடு இல்லாமல் வாழ்ந்து வந்தனர். விடியல் சொசைட்டியின் மூலம் கிராம சபை விழிப்புணர்வு முகாம், அரசு அதிகாரிகளை சந்திக்கும் முகாம் போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களை தயார் செய்து வழிநடத்தப்பட்டது. இதனை சமூக தலைவர் ஆசீர்வாதம், விடியல் களப்பணியாளர்களுடன் சேர்ந்து சிறப்பாக முன்னெடுத்தார். இதன் விளைவாக, அரசின் மூலம் 150க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன.
