14-02-2025 - Vidiyal Society is a voluntary non-profit organization dedicated to the welfare of children. Through this initiative, evening classes under the name CKRC are successfully conducted in 40 villages. These classes help children complete their homework, allowing them to attend school the next day without fear and develop a keen interest in learning. With this long-term vision, Mrs. M. Maheswari, the Director of Vidiyal Society, actively oversees and implements these initiatives. Vidiyal's field workers also play a vital role as dedicated mentors. As part of this effort, the Director, Mrs. M. Maheswari, recently visited and reviewed the evening class at ST Colony, Kampanur, Gobi Taluk. Local volunteers continue to support this initiative in every possible way. Additionally, other volunteers contribute by providing materials and various forms of assistance, encouraging students in their education. Our primary goal is to prevent school dropouts and ensure continuous education for every child. If you are interested in supporting this cause, you can contact us at the number below or visit our office to learn more about our work. 14-02-2025 - விடியல் சொசைட்டி என்பது குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பாகும். இந்த அமைப்பின் கீழ், CKRC என்ற பெயரில் 40 கிராமங்களில் மாலை நேர வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன. இவற்றின் மூலம் பிள்ளைகள் வீட்டு பாடங்களை முடித்து, அடுத்த நாள் பள்ளிக்கு பயமின்றி சென்று, படிப்பை ஆர்வமுடன் கற்று கொள்வார்கள். இந்த தொலைநோக்கு பார்வையுடன், திருமதி M. மகேஸ்வரி அவர்கள் விடியல் சொசைட்டி இயக்குநராக செயல்பட்டு, திட்டங்களை செயல்படுத்தி, களத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விடியல் களப்பணியாளர்களும் சிறந்த வழிகாட்டிகளாக பணி புரிந்து வருகிறார்கள். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மகேஸ்வரி அவர்கள் கம்பனூர் ST காலனி, கோபி தாலுக்கா மாலை நேர வகுப்பை ஆய்வு செய்தார். உள்ளூர் உதவியாளர்கள் தங்களால் முடிந்தவரை உதவுகின்றனர். மேலும், தன்னார்வலர்கள் பொருட்கள் மற்றும் பிற உதவிகளின் மூலம் மாணவர்களின் படிப்பில் ஆர்வத்தை ஊக்குவிக்கின்றனர். எங்கள் தலையாய நோக்கம் இடைநில்லா மாணவர்களை உருவாக்குவது. நீங்களும் இந்த முயற்சிக்கு உதவ விரும்பினால், கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்கள் அலுவலகத்தை நேரில் பார்வையிடலாம். எங்கள் பணிகளை மேலும் தெரிந்து கொள்ள வருகை தர அன்புடன் அழைக்கிறோம்.
Vidiyal Tailoring Center